Sunday 1 July, 2007

"சிவாஜி - த லூஸு" தமிழினத்தின் விடி வெள்ளி?...

அன்பர்களே,

உலகத்துல மூலை முடுக்குன்னு பாக்காம எல்லா பகுதில இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே நேரத்துல பைத்தியம் பிடிக்குமா? அந்த அதிசயம் நடந்துச்சு. போன ஜூன் 15ஆம் தேதிக்கு. இன்னும் சில பேருக்கு அது தெளியவேயில்லை. தமிழ்நாட்டிலும், மற்றும் உலகத்துல எங்கெங்கோ இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே பிரச்சினை. ஒரே கேள்வி. சிவாஜி பார்த்தாச்சா? படம் எப்படி? - இப்படி தான் நம்ம டி.வி. பேப்பர், நெட் எல்லாம் பாத்தா யோசிக்க தோணுது.
ரஜினி ரஜினி மாதிரியெ இல்லையாம் ( குரங்க மனுசனா மாத்தி விட்ட மாதிரியோ? )அவ்வளவு அழகா இருக்காராம். இன்னாள் முதல்வர் குடும்பத்தோட பார்க்கிறாராம். அடுத்ததா முன்னாள் முதல்வரும் பார்க்கிறாராம். பத்தாததுக்கு ஆந்திரா முன்னாள் முதல்வர் வேற பாத்துட்டு அவங்க கட்சி காரவுக எல்லாம் கண்டிப்பா பாக்கணுமுன்னு கட்டளை போட்டுருக்காராம்.
நம்ம ஒயிட் ஹவுஸ் தாதா ஜார்ஜ் புஷ்ஷு கூட இராக்குல இருக்கிற பஞ்சாயத்தெல்லாம் சட்டு புட்டுனு முடிச்சுப்பிட்டு சிவாஜி பாககலாம்னு இருக்காராம்.
என்ன நடக்குது இங்க? ஒரு படத்துக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். ரஜினி ரசிகன்னு சொல்ற ஆளுங்கள விடுங்க. நம்ம சராசரி ஆளுங்களுக்கே இந்த பில்டப்புகள பார்த்து ஒரு உறுத்தலும் இல்லையே?. அப்படின்னு பல கேள்விகள். உண்மையில இதன் பின்னணி என்னங்கிறத எல்லாம் ஒரு பொதுவான ஆளு கேக்கிற கேள்விகளில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இனி அது மாதிரியான கேள்விகளும் அதுக்கான பதில்களும் ( நான் புரிந்து கொண்ட வரைக்கும்...)

"இப்ப சிவாஜி படத்துக்கு பண்ற அத்தனை களேபரமும், ரஜினியா பண்றாரு? அவங்க ரசிகர்கள்னு சொல்லிகிட்டு தானே பண்றாங்க. இதுக்கு போய் எல்லோரும் ரஜினியை ஏன் திட்டுறாங்க. என்னங்க நியாயம் இது?"

உண்மைதான்.பொதுவா இப்பல்லாம் ரஜினி படத்துக்கெல்லாம் படம் தயாரிக்கிற ஆளுங்க விளம்பரம் பண்ண வேண்டியதில்லை. சும்மா ஒரு பிட்டு போட்டா போதும். எல்லாத்தையும் மீடியாவே பார்த்துக்குறாங்க. அதிலயும் இந்த ரசிகர்கள் ஒரு படம் வர்ரதுக்கு கட் அவுட் பாலாபிஷேகம் பண்றதும், காவடி தூக்கிறதும் பார்க்கிறப்போ கூடிய சீக்கிரமே நம்ம அப்துல் கலாம் சொல்ற மாதிரி இந்தியா வல்லரசாகிடுமோன்னு தான் தோணுது. ஆனா உங்கள் கேள்விப்படி ரசிகர்கள் செய்யுற சேட்டைகளுக்கும், அதிகப்பிரசிங்கித்தனதுக்கும் ரசிகன் மட்டுமே காரணம். ரஜினி ஒரு அப்பாவி. பாவம் அவருக்கு எதுவுமே தெரியாதுன்ற மாதிரி இருக்கிறது. இது உண்மையா?.
எங்கியோ இமயமலையில இந்தியால நூறு கோடி பேருக்கும், அத்தனை பத்திரிகை, டிவிக்கும் தெரியாம 2000 வருசமா ஒளிஞ்சிகிட்டு இருந்த பாபாவை கண்டு பிடிச்சி சொன்னவருக்கு இங்க நம்ம ஊருல நடக்கிற விசய்ம் தெரியாதா?அவருக்கு தெரியும். இப்படியெல்லாம் நடந்தா தான் அவர் படத்துக்கு விளம்பரம் இருக்கும்னு …கூட்டம் வரும்னு. அதுவுமில்லாம ஒவ்வொரு படத்துலயும் நம்மாளுக்கு "உன் வாழ்க்கை உன் கையில்"னு அட்வைஸ் பன்றவர்க்கு இப்ப ரசிகன் சொந்த வேலைய விட்டுட்டு இப்படி தன்னோட படத்துக்கு வெட்டியா காவடி தூக்குறது தப்புன்னு. எல்லாம் தெரிஞ்சும் சும்மா அமைதியா இருக்குறது எதுக்கு?
சரி ரசிகன் தானா வந்து ஏமாளியா இருக்கான். அதுக்கு ரஜினி என்ன பண்ணுவாருன்னு நீங்க கேக்கிறது புரியுது. ஒரு உதாரணத்துக்கு நிறைய போலி சாமியார் கதை படிதிருப்பீங்கல்ல. (சாமியார்னாலே போலி தானே, அதுல என்ன நல்ல சாமியார், போலி சாமியாருன்னு என்பது வேறு விசயம், அதை அப்புறம பார்த்துக்கலாம்). எந்த சாமியாராவது பக்தனிடம் அடிச்சு பிடுங்கியிருக்கிறார்களா? எல்லாமே பக்தனை பக்தி மயக்கத்தில் வச்சுக்கிட்டே நம்மாளு அடிக்கிறது தான். பிரேமானந்தாவையெல்லாம் இப்பவும் ஜெயில்ல வந்து பக்தர்கள் பாக்குறாங்களாம். நம்ம ஜெகத்துகுரு சங்கராச்சி கூட வெளில வந்து ஜெகஜோதியா கல்லா கட்டிட்டு தான் இருக்கார். இன்னமும் இவனுகள சில பேரு நம்பிகிட்டு தான் இருக்காங்க. இப்ப உங்களுக்கு பக்தன் மேல் வருகிற அதே கோபம் சாமியார் மேலும் வர வேண்டும். அது தான் நியாயம்.
இன்னும் சொல்லப் போனா ரஜினிக்கு தெரியாதா. இப்போ தமிழ் நாட்டில் எத்தனை பேர் படம் பார்ப்பார்கள் அதில் எத்தனை பேர் தியெட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று. அப்புறமும் இத்தனை கோடி போட்டு தியேட்டர் முதலாளி படப்பெட்டி வாங்கினால் அவன் நியாயமான தியேட்டர் கட்டணம் வைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியாதுன்னு. அப்ப யாருக்கு மொட்டை அடிக்கலாம். வேற யாரு.. நம்ம ரசிக மக ஜனங்களை தான்! ஒவ்வொரு டிக்கெட்டும் 500 ரூபாய் 1000 ரூபாய் என்று செய்திகள் வருகின்றன. (ஏறக்குறைய எல்லா பத்திரிக்கையிலும் செய்தி வருகிறது, சிவாஜி பட டிக்கெட் கட்டணத்தை பற்றி. ஆனா அரசு தரப்பில இது பத்தி ஒரு நடவடிக்கையும் இல்லையே! கலைஞருக்கும் ரஜினிக்கும் உள்ள உள்குத்து என்னன்னு விளங்குதா?) இப்படி மக்களை (அதுவும் சொந்த ரசிகனையே) கொள்ளை அடிக்கிற கூட்டணியின் காரணகர்த்தாவை, தலைவனை எப்படி அடிப்படையில் அப்பாவி என்றும் யோக்கியன் என்றும் சொல்ல முடியும்? எனக்கு புரியலையே சாமி..

"அதெல்லாம் சரி..ரஜினி அவர் சொந்த உழைப்பால் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்.. அவருக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு.. அவருக்கு நல்ல மார்க்கெட்டு இருக்கு..அவர் கோடி கோடியா சம்பாதிக்கிறார்..உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல்?.."

ரஜினி என்ன உழைக்கிறாருங்கிரது இருக்கட்டும். பொதுவா ஆரம்பத்துல கஷ்டப் பட்டு தான் எல்லோரும் எந்த தொழிலிலும் முன்னுக்கு வருகிறார்கள். ஆனால் இங்க எந்த உயரதுக்கு அப்படிங்கிறதில தான் பிரச்சினையே இருக்கு. எந்த அளவுக்கு?.. இவ்வளவு தூரம் தெரிந்தே நம்மை சுரண்டுவதையும் நாம் அதை அங்கீகரிக்கிற அளவுக்கும். வேறொண்ணும் வேணாம். பஸ்ஸுல பிக்பாக்கெட்அடிக்கிறவன் திறமைய கூட யோசிச்சு பாருங்க. ந்ல்ல கூட்டமான பஸ்ஸ தேர்ந்தெடுக்கணும். அத்தனை பெரிய கூட்டத்துல யார்கிட்ட பர்சுல கணம் இருக்குன்னு கண்டு பிடிக்கணும் அப்புறம் அத்தனை கூட்டத்திலயும் யாருக்கும் தெரியாம பர்சை உருவனும். கொஞ்சம் எவனுக்கும் தெரிஞ்சாலும் உதார் விட்டு தப்பிக்கணும். ( கொஞ்சம் அசந்தாலும் மக்கள்கிட்ட சிக்கினா சிதறு தேங்காய் தான்..) பின்னாடி கூட்டாளி கிட்ட கை மாத்தி விடணும். அப்புறம ஓடுற பஸ்ஸுல இருந்து இறங்கி எஸ்ஸாகனும். எல்லாம் முடிச்சுட்டு கூட்டாளியோட கூடி பிரச்சினை இல்லாம பங்கு போடணும்.. இப்படி எவ்வளவு திறமை வேண்டி இருக்கு..இப்ப நீங்க பிக் பாக்கெட் அடிக்கிறவன் மேல கோபப் படுவீங்களா.. இல்லை அவனோட திறமைய மெச்சுவீங்களா?.. இல்ல பர்ஸை பறி கொடுத்த ஆளு மேல பாய்வீங்களா? பொதுவா ஒரு வசனம் சொல்லுவாங்க. ஒரு மனுசன் பட்டினியோட இருக்கிறதை விட அவன் பட்டினிக்கு என்ன, யாரு காரணம்னு தெரியாம இருக்கிறது தான் கொடுமைன்னு! அது மாதிரி ஒரு மனுஷன் தன்னை அறியாம தன்னை சுரண்ட அனுமதிக்கிறதுவும் தான் கொடுமை.

" நீங்க என்ன சொன்னாலும் எத்தனை பேரு ரஜினிய பாராட்டுறாங்க.. அவங்கெல்லாம் முட்டாளா? எல்லா மீடியாவும் தான் சிவாஜி பத்தி பேசுறாங்க.."

இது ஒரு பெரிய கூட்டணி. ரஜினிக்கு சிவாஜிய வியாபாரம் செய்ய (விளம்பரப்படுத்த) ஊடகங்கள் எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு ஊடகங்களுக்கும் அவங்க வியாபாரத்துக்கும் ரஜினி மாதிரி ஒரு பிம்பம் தேவை. இப்ப "சிவாஜி ரஜினி மொட்டை அசத்தல்" அப்படின்னு குங்குமமோ இல்ல "சிவாஜி-வெளி வராத ரகசியங்கள்" அப்படின்னு ஆனந்த விகடனோ ஒரு செய்தி போட்டா உடனே பத்திரிகை விற்பனை எகிருதில்லை?! அதுக்காகவேணும் போட்டி போட்டு ஒருதருகொருத்தர் பரபரப்பு பண்ணி பில்டப்பு கொடுப்பார்கள். அது போக நம்ம படிச்சதுகள் கூட இலவசமா விளம்பரம் செய்யுதுகள். புதுசா புதுசா சிவாஜி ஸ்டில்ஸ், வீடியோன்னு இலவசமா மெயில்ல சுற்றுக்கு விட்டு...

"பெரிய தலைகளெல்லாம் கூட சிவாஜி படம் பார்த்துட்டு வந்து கருத்து சொல்றதும் அது பேப்பர்ல வர்றதுமா இருக்கே..(கருணா நிதி, ஜெயலலிதா, சந்திர பாபு நாயுடு, அப்புறம் திரையுலகத்துல எல்லோரும்) அவங்களுக்கு கூடவா தெரியாது?.."

நம்ம திரையுலகத்துல தெரியும். அரசியல்ல இருக்கிறத விட மோசமான சொறிஞ்சு விடுற கூட்டம் நிறைய உண்டு. (அதுதான் இன்னும் டி ஆர் மாதிரி ஆளுங்க எல்லாம் கொஞ்சமும் வெட்கம், கூச்சம் இல்லாம கலர் டை அடிச்சுட்டு ஹீரோவா நடிக்கிறார், கூட இருக்கிற யாரும் சொல்றதில்ல யோவ் இது கேவலமா இருக்குன்னு..) அதுனால திரையுலகத்துல இருக்கிறவங்க சொல்றதை விட்டுரலாம். அது ரஜினிக்கு சொறிஞ்சு விடுற வேலை. கருணாநிதியோ, ஜெயலலிதாவோ , சந்திரபாபு நாயுடுவோ படம் பார்த்து கருத்து சொல்லுறது விளம்பரம் கொடுக்கிறது எல்லாம் அவங்க சொந்த நலனுக்காகவும் தான்! யாரு வேணாலும் தான் படம் பார்க்கலாம். நீங்களும், நானும் படம் பாக்கிறோம் அது மாதிரி அவங்களும் மனுசங்க தானே! அவங்களும் பார்க்கட்டும். தப்பில்லை! இங்க வித்தியாசம் என்னன்னா அவங்களுக்கு சிறப்பு காட்சின்னு போட்டு அதை மீடியாவுக்கு சொல்றதும், அப்புறம் நிருபர்கள் எல்லாம் வந்து படம் எப்படின்னு கருத்து கேட்டு அத பேப்பர்ல போடுறதுன்னு நாடகம் எல்லாம் எதுக்கு? ரஜினிக்கும், AVMக்கும் சிவாஜிக்கான விளம்பரம்.. மு.க.வுக்கும் ஜெ.ஜெ.க்கும் ரஜினி கூட எங்க ஆளுன்னு காமிக்கணும்.. ( அதிலயும் சிவாஜி படம் என்னமோ கருப்பு பணத்தை பத்தியாமுல்ல?! மு.க., ஜெ.ஜெ. கிட்ட இல்லாத கருப்பு பணமா. நம்மள பத்தி எதுவும் படத்துல போட்டு கொடுத்துட்டானுங்களோன்னு செக் பண்ண வந்திருப்பாங்களோ!!) அதிலும் நம்ம சந்திர பாபு நாயுடு ஒரு படி மேல போயி ரஜினி மூணாவது அணியில சேரணும்னு ஒரு கோரிக்கை வேற. கெரகம்டா சாமி...

"என்ன தான் இருந்தாலும் ரஜினி படம் பாக்கிறவன் அவனவன் சந்தோசத்துக்காக ஒரு தடவை பிளாக்குல டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு தான் போகட்டுமே..அதிலென்ன தப்பு?.. இதுக்கு போய் ஏன் இவ்வளவு பிரச்சினை பண்றீங்க?.."

இதுக்கு நம்ம சங்கர் படத்துல இருந்தே ஒரு வசனம் சொல்றேன்..

அஞ்சு பைசா திருடுனா தப்பா?...
இல்லை..
அஞ்சு அஞ்சு பைசாவா அஞ்சு வருசத்துக்கு அஞ்சு கோடி பேருகிட்ட திருடுனா தப்பா?...
ம்ம்ம்ம்ம்..??
( ஆனா இங்க சிவாஜி டிக்கெட் போன விலையெல்லாம் தமிழ் நாட்டுல பல பேரோட அரை மாச சம்பளம்..)

அது சரி எல்லாம் கோளாறு சொல்றீங்களே..படத்தோட கதைய பத்தி ஒண்ணும் சொல்லலையேன்னு கேக்கிறீங்களா.. ஸாரி.. நான் அம்புலி மாமா, காமிக்ஸ் கதையெல்லாம் படிக்கிறதை விட்டு ரொம்ப வருசமாச்சு...

சிவாஜி பில்டப்புக்கு சில உதாரணங்கள்..

* சிவாஜி படத்தை செல் போனில் படம் பிடித்த 3 ரசிகர்கள் கைது - பத்திரிகை செய்தி .. ( செல் போன்ல படம் பிடிசு திருட்டு VCD போட்டு வித்துடுவங்களோ.. )
* ரஜினி மொட்டை கெட்டப்புல வருகிற போட்டோவை அனுமதியில்லாம பிரசுரம் செய்த பதிரிகைகளுக்கு சங்கர் வக்கீல் நோட்டீஸ்.(என்ன கொடுமை சரவணன் இது?...)
* படத்தில் 5 நிமிடம் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டில் ரஜினி வெள்ளைக் காரன் போல் தோன்றுவதற்கு ஒரு பெரிய சாப்ட்வேர் டீம் ஒரு வருசம் வேலை செய்து கொண்டிருந்தார்கள்( இது டூ மச்சு.. த்ரீ மச்சு .. ஃபோர் மச்சு....)
* இப்ப எம்ஜியார், சிவாஜி எல்லாமே ரஜினி தான். அவர் தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் இல்லை.. இப்ப சர்வதேச சூப்பர் ஸ்டார் ஆக முன்னேறியுள்ளார் - கே. பாலசந்தர் ( ஆமாய்யா.. நேத்து தான் ரசியால கூட தஸ்தரோய்க்கி ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பிசிருக்காங்க.. தஸ்தரோய்க்கின்னா ரசிய மொழியில அதிரடி மன்னன்னு அர்த்தமாமுல்ல?)
* சென்னையில முதல் 3 மாசத்துக்கு தியேட்டர் எல்லாம் டிக்கெட் புக்கிங் முடிஞ்சு போச்சு - ண்DTV செய்தி ( தியேட்டருக்கு 4 ஷோன்னு கணக்கு பண்ணாலே சராசரியா ஒரு 50 லட்சம் டிக்கெட் புக் பண்ணியிருக்கணுமேய்யா சென்னையில மட்டும்.. சொல்லுங்க...)
* ரஜினி 25 வருசதுக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அதை விட இளமையா சிவாஜி படத்தில் இருக்கிறார் - ஒரு பேட்டியில் சிவாஜியின் தொழில் நுட்ப கலைஞர்...( அய்யோ போதும்டா சாமி...)


எப்படி இருந்த நான்...




இப்படி ஆகிட்டேன்?......

மேக்-அப் கலைஞருக்கு ஒரு பெரிய "ஓ" போடுங்க...

10 comments:

குழலி / Kuzhali said...

பின்னி பெடல் எடுத்திருக்கிங்க :-)

said...

எளிமையான சொற்கள் மற்றும் எளிமையான உதாரணங்களோடு மறுக்கமுடியாதபடி வெகு அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்! படுஅமர்களமாக பதிவுலகத்தில் கால்பதித்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் :-)

தோழமையுடன்
ஸ்டாலின்

அசுரன் said...

ரஜினி ரசிகர்கள் தமது ரசிப்பு தன்மையிலிருது மீள முடியாமல் மொன்னையாக வைக்கும் பல்வேறு கேள்விகளை தொகுத்து அதற்க்கு அமைதியாக பதில் தந்த விதம் பாரட்டத்தக்கது. வாழ்த்துக்கள் இது போல பிற சமூக அநீதிகளையும் எதிர்த்து உங்களது எழுத்துக் கணைகளை வீசுங்கள்.

//அவன் பட்டினிக்கு என்ன, யாரு காரணம்னு தெரியாம இருக்கிறது தன் கொடுமைன்னு. அது மாதிரி ஒரு மனுஷன் தன்னை அறியாம தன்னை சுரண்ட அனுமதிக்கிறதுவும் தான் கொடுமை..
//

இந்த வரிகளை கேட்டாலே அதிருது.

சம்பந்தப்பட்டவங்க புரிஞ்சிக்க வாய்ப்பு கம்மியே ஏனெனில் இங்கு இணையத்தில் ரஜினிக்கு கும்பா துக்குபவர்கள் எல்லாம் வயித்துப் பிரச்சனையில்லாத யுப்பி வர்க்கம் எனவே தனது சொந்த சுக துக்கங்களின் ஊடாக்வே சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உள்வாங்கும் அல்பைகள். எனவே இவையெல்லாம் புரிவது கஸ்டம்.

அசுரன்

பால்வெளி said...

பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல...
அசுரன், நீங்கள் கருத்து முழுதும் உண்மையே.. ஆனாலும் என்செய்வது..நம் கடமை கடைசி வரைக்கும் விடாமல் போராடுவதுதானே! முயற்சிப்போம்..

தோழமையுடன்,
பால்வெளி..

Anonymous said...

நல்ல பதிவு.
நல்வரவு நண்பரே.
-கோகுல்

புத்தகப் பிரியன் said...

வலையுலகிற்கு வந்த உள்ள புதிய தோழருக்கு வாழ்த்துக்கள்...

கழிசடை ரஜினியையும் , அவனது
சொம்பு தூக்கிகளையும் கிழித்துவிட்டீர்கள்...


(உங்கள் பதிவை புத்தகப் பிரியன் தளத்திலும் இணைத்து உள்ளேன்)

பகத் said...

தோழர் பால்வெளி...

பாசிசம் வேறு ரஜினி வேறு அல்ல.

இருட்டில் இயங்கும் பார்ப்பணீய பயங்கரவாதி ஜெயேந்திரனைவிட மிகுந்த கொடூரமானவனே இந்த கோமாளி.

ஒரு வருட காலம் நம்முடைய சாப்டுவேர் கிறுக்கன்களால் போடப்பட்ட முகத்திரையை ஒரு நொடியில் கிழித்துவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள் தோழா!!!...

Anonymous said...

its a good article..

Pot"tea" kadai said...

ச்சும்மா அதிருதில்ல...

பதிவ தான் சொல்றேன் ஓய்!!!

;)

லிவிங் ஸ்மைல் said...

good writting ;

keep it up;