Sunday, 22 July 2007

சுஜாதாவிற்கு செருப்படி தேவையா?

அன்பர்களே,

சமீபமாக, அசுரன் எழுதிய ஒரு கட்டுரையில் ஆணாதிக்கத்தையும்,நிறவெறியையும்,சமூக சீர்கேட்டையும் பரப்பும் சுஜாதாவைச் செருப்பலோ, விளக்குமாறாலோ அடித்து பாராட்ட வேண்டும் என எழுதியிருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை.. என்ன உடன்பாடில்லை என்று இறுதியில் சொல்கிறேன்.
(அசுரனின் முழு கட்டுரையையும் படிக்க http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_4202.html ).
இந்த கட்டுரைக்கு பலரும் பின்னூட்டமிட்டு சுஜாதா தரப்பு நியாயங்களை சுஜாதாவையும் விஞ்சும் அளவுக்கு கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக கம்யூனிச பூச்சாண்டி என்றும் மற்றும் சில அனானிகளும் வைக்கிற வாதஙளை மட்டும் வைத்துக்கொண்டு அலசுவோம்.

வெறுமனே கதை எழுதுகிற எழுத்தாளனிடம் ஏன் சமூக அக்கறை இருக்க வேண்டும்?

எப்போதுமே கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கானது.. அது இசையோ, எழுத்தோ, ஓவியமோ, திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால் எதுவாக இருந்தாலும் சரி, எந்த ஒரு படைப்புமே படைத்துவிட்டு அடுத்தவனுக்கு தெரியாமல் அவனுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள படைக்கப்படுவதில்லை. அது பொதுப் பார்வைக்கு வருகிற போது பயனாளியும் பாதிக்கப்படுகிறார்,அவர் வளர்ச்சிக்காகவோ அல்லது சீரழிவிற்காகவோ ஏதோ ஒரு வகையில். எனவே ஒரு படைப்பு என்பது சமூகத்தை ஒரு அங்குல அளவாவது முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் என்றால் அதை நாம் வரவேற்கலாம்.அல்லது அப்படைப்பு குறைந்தபட்சம் சமூகத்தைப் பின்னுக்கு இழுக்காமல் இருந்தாலாவது போதும்..அந்த வகையில் பார்க்கிறபோது யாருக்கெல்லாம் சமூகத்தின் மீதும் சக மனிதன் மீதும் அக்கறை இருக்கிறதோ அவர்களையெல்லாம் படைப்பாளியும் எதிர் கொண்டேயாக வேண்டும்...

சுஜாதாவும் நல்ல கதை எழுதவில்லையா? ஏன் அவர் திரைப்படத்தில் எழுதியதை மட்டும் வைத்துக் கொண்டு அவரைத் தூற்ற வேண்டும்?

நல்லது. நான் சுஜாதாவின் எல்லா கதைகளையும் படித்ததில்லை.. உடனே அவர் எழுதிய எல்லாவற்றையும் படித்து விட்டு தான் விவாதத்திற்கே வர வேண்டும் என்று அவசியமில்லை.எனக்கு தெரிந்தவற்றில் ஒரு உதாரணம் மட்டும் கூறுகிறேன்.அந்த கதையின் பெயர் நினைவில்லை. ஒரு பகுதியை மட்டும் சொல்கிறேன். அக்கதையில் ஒருவருக்கு ஒரு தீவிரமான உடல் பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.சில ஆங்கில வைத்தியரிடம் போய் ஒன்றும் சரியாகாமல் ஒரு நாட்டு வைத்தியரிடம் போவார். இந்த வைத்தியரின் இடததை விவரிக்கிற போது தெய்வீக மணம் கமழும் இடமாகவும், சுற்றியும் ராமகிருஸ்ண பரமஹ்ம்சர், விவேகானந்தர் போன்றோரின் படங்கள் மாட்டியிருப்பதாகவும் எழுதியிருப்பார். அதாவது ஒரு சாதாரண வாசகனுக்கு மரியாதைக்குரிய ஒரு கதாபாத்திரம் போன்று இருக்கும். அந்த வைத்தியர் இவரிடம் ஒரு லேகியத்தை கொடுக்கிறார். அதை எப்படி சாப்பிட வேண்டும் என சொல்கிறபோது வைத்தியர் சொல்வதாக சொல்கிறார். " இந்த லேகியத்தில் ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுக்கு அதாவது ஒரு 13 வயசு பொண்ணுக்கு இருக்குமில்ல.. அந்த சைசுக்கு எடுத்து காலையும் மாலையும் சாப்பிடணும்" என்று எழுதி இருப்பார்..இந்த கதாபாத்திரத்திற்கும் அவர் பேசும் வசனத்திற்கும் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா? ஒரு 40,50 வயது ஆளுக்கு 13 வயசு பெண்ணைப் பார்தால் என்ன தோன்ற வேண்டும்? சுஜாதாவிற்கு என்ன தோன்றுகிறது? இது தான் சுஜாதா. இந்த கதை எழுதிய காலம் சுமார் 20,25 ஆண்டுகளுக்கு முன்பு. ஆக, அவரின் சொந்த மன ஆழத்தில் உள்ள வக்கிரம் அவரின் எழுத்திலும் வெளிப்படுகிறது.
ஆனால் இங்கே நம் பூச்சாண்டி ஏதோ "அரிசி" கதையில் அவர் சமூக அவலத்தை சொல்லவில்லையா என்கிறார். எனக்கென்னவோ இந்த கேள்விக்கும்,"சுஜாதா இத்தனை நாள் சோறுதானே தின்னுட்டு இருந்தாரு..ஏதோ ஒரு நாள் வேறு "எதை"யோ தின்னதுக்கு போய் திட்டுறதா?"என்ற கேள்விக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.(முகம் சுளிக்கிற வாசகர்கள் மன்னிக்க, சுஜாதா தரப்பு நியாயத்துக்கு இந்த கேள்வி தகும்)

பாய்ஸ் படத்தை எடுத்துகொண்டு எல்லோரும் விமர்சிக்கிறார்கள். ஏன் அது மாதிரி எல்லாம் நடப்பதே இல்லையா நம் நாட்டில்?

பாய்ஸ் படத்தில் சுஜாதாவுடைய, சங்கருடைய ஒட்டு மொத்த வக்கிரமும் வெளிப்படுகிறது. அப்படியெல்லாம் நடக்கிறதே இல்லையா என்றால், அங்கங்கே நடக்கிறது தான்.. ஆனால் அதை எல்லோருக்கும் பொதுவாக்கவும், நியாயப்படுத்தவும் மேலும் ஊக்குவிக்கவும் மட்டுமே இந்த மாதிரி படங்களும், வசனமும் பயன்படுகின்றன..பாய்ஸ் படத்தில் கவனித்துப் பார்த்தால், இளைஞர்கள் அப்படி இருப்பதில் தவறில்லை.. அந்த வயதில் அப்படிதான் இருப்பார்கள் என்று தான் வசனத்திலும், காட்சியமைப்பிலும் நிறுவியிருப்பார்கள்.கவுண்டமணி பாணியில் "இந்த வயசில் இதெல்லாம் சகஜம்ப்பா". இதைத் தான் "இழிவான சிந்தனை வயப்பட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்படும் தேவையும் இல்லாமல் இவரது எழுத்து நடை செய்து விடுகிறது" என்று அசுரன் கட்டுரையில் சொல்கிறார்.அதிலும் "சிவாஜி"யில் கறுப்பு நிறத்தை கிண்டல் செய்யும் காட்சியை பார்க்கிற போது, உங்கள் தோளில் ஒருவன் கை போட்டுக்கொண்டே "அப்புறம்..வேசி மகனே, எப்படிரா இருக்கே?" என்று கேட்டால் எப்படி இருக்கும்.அதே மாதிரி கோபம் தான், நம்மை இழிவுபடுத்தி நம்மிடமே விற்பனை செய்கிற சுஜாதா, சங்கர் வகையறாக்களின் மேல் ஏற்படுகிறது.

சுஜாதா கதை எனக்கு பிடிக்கும். உஙளுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள். ஏன் நான்(அல்லது நாங்கள்) மதிக்கிற எழுத்தாளரை திட்ட வேண்டும்?

ஒரு தனி எழுத்தாளர் மேல் பூச்சாண்டி போன்றோருக்கு இருக்கும் கரிசனத்தை, அக்கறையை விட அவரின் எழுத்தில் மயங்கிகிடக்கிற, அதனால் பாதிக்கப்படுகிற சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை தான் அசுரன், சுகுணா திவாகர் போன்றோரை சுஜாதாவை அம்பலப் படுத்த தூண்டுகிறது. அல்லது குறைந்த பட்சம் என் மனைவியை, சகோதரியை, என் சமூக மதிப்பை சுஜாதாக்களிடமிருந்தும் அவர் வாசகர்களிடம் ஏற்படுத்தி வைத்திருக்கிற வக்கிரங்களிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டிய தேவையாவது எனக்கு இருக்கிறது..

இன்னும் நிறைய பேசலாம்..ஆனால் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

நான் ஆரம்பத்தில் சொன்னேன். அசுரன் எழுதியதில் உடன்பாடில்லை என்று.. அதாவது அசுரன் சொன்னதெல்லாம் குறைவு. இப்போது தலைப்பில் சற்று பிழை இருக்கிறது. இப்படி வைத்து கொள்ளலாம்.

"சுஜாதாவிற்கு செருப்படி போதுமா?"

மாத்தி வாசி...

18 comments:

மிதக்கும்வெளி said...

((-

நல்ல பதிவு. ஒவ்வொரு பதிவிலும் நான் வழக்கமாக சந்திக்கும் கேள்விகள்தான்.

TBCD said...

இதை நான் ரசித்தேன்..ஏன்னா..இதில் ஒரு குறுக்கு விசாரனை வக்கில் போல விசாரனை செய்து..கடைசியில் ஜுரிகளிடம் "இது நியாமா" என்று கேட்பது போல் கேட்டிருக்கீர்..ஜுரிகளின் தீர்ப்பு..." நந்தா" ஸ்டயல் தீர்ப்பு

TBCD said...

செருப்படி...சங்கர், சுஜாதாவிற்கு மட்டுமா..?...கொஞ்சம்..தமிழ் சேனல்களை விட்டு கொஞ்சம் "Hindi" சேனல்களை பாருங்க.. ரத்தம் கொதிக்க வைக்ககூடிய அளவிற்கு தமிழர்களை இழிவுப் படுத்துகின்றனர்...அதை பற்றி இது வரை யாரும் பேசவே இல்லை என்று நினைக்கிறேன்..அது பற்றி உங்கள் கருத்து

கருப்பு said...

அருமையான பதிவு தோழரே!

பாராட்ட வார்த்தைகள் இல்லை!

எலுமிச்சம் பழ சைஸ் பிரச்னை நான் பள்ளி படிக்க்கும்போது ஒரு பாப்பானால் கேள்விப் பட்டேன்.

எங்கள் பள்ளியில் வாத்தியானாய் இருந்த ஒரு பாப்பான், அவனது எதிர் வீட்டுச் சிறுமியிடம் "எலுமிச்சம் பழத்தை தொட்டுக்கட்டுமா?" என்று கேட்க அந்த சிறுமி அவங்க அப்பாவிடம் சொல்லி தெருவே அவனை இழுத்து வந்து விளக்குமாற்றால் நையப் புடைத்தார்கள்.

பருப்பும் நெய்யும் வாட்டிய கத்தரிக்காயும் செய்யும் வேலை இவை எல்லாம்!

அசுரன் said...

கம்யுனிச பூச்சாண்டியின் வாதங்களை நிராகரிக்கவே முயன்றேன். ஆயினும் அவற்றில் உள்ள மக்கள் விரோத தன்மைகளை விளக்கமாக அம்பலப்படுத்தி கட்டுரை இட்டுள்ளீர்கள்.

கம்யுனிச பூச்சாண்டி இங்கும் வந்து வாதாடுவாரா?

தெரியவில்லை. ஆனால் படித்த பலருக்குள்ளும் ஒளிந்திருந்த கம்யுனிச பூச்சாண்டிகளுக்கு இந்த பதிவு நன்கு பயனளிக்கும்.

வாழ்த்துக்கள்
அசுரன்

Anonymous said...

//எப்போதுமே கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கானது.. அது இசையோ, எழுத்தோ, ஓவியமோ, திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால் எதுவாக இருந்தாலும் சரி, எந்த ஒரு படைப்புமே படைத்துவிட்டு அடுத்தவனுக்கு தெரியாமல் அவனுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள படைக்கப்படுவதில்லை. அது பொதுப் பார்வைக்கு வருகிற போது பயனாளியும் பாதிக்கப்படுகிறார்,அவர் வளர்ச்சிக்காகவோ அல்லது சீரழிவிற்காகவோ ஏதோ ஒரு வகையில். //


சுஜாதாவின் எழுத்துக்கள் சமூகத்தை இத்துணூண்டுகூட முன்னேற்றவில்லை என வைத்து கொள்வோம் .

எந்த அளவுகோலில் அய்யா நீங்கள் அளக்கிறீர்கள் . சமூக முன்னேற்றத்துக்கான தங்களது தரவு என்ன , அவரது கதைகளை முழுக்க வாசிக்காமல் எழும்பிச்சம்பளம் கதையை மட்டும் வச்சு வாதாட வந்த உங்களை என்ன செய்யலலம் .
அதாவது அவரது ஒரு கதாபாத்திரம் பேசும் பேச்சை நீங்கள் சுஜாதாவின் பேச்சென கருதி சுஜாதவின் வக்கிரம் என சொன்னனல் எவனும் இனிமேல் கதை எழுத முடியாது .

ஒரு கதாபாத்திரத்தில் பத்து பேரை கொல்வதாக வரும் வில்லனை நம்ம ஊரு பாட்டிகள் எப்படி வெறுப்பாங்களோ அம்மாதிரி இருக்கு உங்க வாதம் ,

சுஜாதாவை செருப்பால் அடிக்க இன்னும் போதிய காரணத்தை கண்டுபிடிக்கவில்லை .

அசுரன் சொன்னமாதிரி இலக்கு சுஜாதா அல்ல அவரது வாசகர்கள் என உண்மையை சொல்லிவிட்டு போங்கள்

Anonymous said...

அன்புள்ள நண்பரே,
இந்தியில் ஒளிபரப்பாகும் அத் தொடர்கள் குறித்த தகவல்களை கொஞ்சம் அனுப்பி வையுங்களேன். அது பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்,
பாமரன்

Anonymous said...

//எப்போதுமே கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கானது.. அது இசையோ, எழுத்தோ, ஓவியமோ, திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஏனென்றால் எதுவாக இருந்தாலும் சரி, எந்த ஒரு படைப்புமே படைத்துவிட்டு அடுத்தவனுக்கு தெரியாமல் அவனுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள படைக்கப்படுவதில்லை. அது பொதுப் பார்வைக்கு வருகிற போது பயனாளியும் பாதிக்கப்படுகிறார்,அவர் வளர்ச்சிக்காகவோ அல்லது சீரழிவிற்காகவோ ஏதோ ஒரு வகையில்.//

படைப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் நிச்சயமாக
உள்ளது ஒத்துகிறேன்

// எனவே ஒரு படைப்பு என்பது சமூகத்தை ஒரு அங்குல அளவாவது முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் என்றால் அதை நாம் வரவேற்கலாம்.அல்லது அப்படைப்பு குறைந்தபட்சம் சமூகத்தைப் பின்னுக்கு இழுக்காமல் இருந்தாலாவது போதும்..அந்த வகையில் பார்க்கிறபோது யாருக்கெல்லாம் சமூகத்தின் மீதும் சக மனிதன் மீதும் அக்கறை இருக்கிறதோ அவர்களையெல்லாம் படைப்பாளியும் எதிர் கொண்டேயாக வேண்டும்...//

சமூகத்தை ஒரு அங்குலம் முன்னேற்றனும்னா ,அது என்ன அளவு,
பாட்டாளிவர்க்கத்தை அணிதிரட்டுகிற , மூலதனத்தையும் அதன் கேடையும்
வெளிகொணருகிற எழுத்தைத்தான் ஒரு அங்குல முன்னேற்றம் என்பீரோ.

இதுவரை எழுதிய கதைக்காரன் எல்லாம் கம்யூட்டர் என்றால் என்னவென்று கேட்பான். சமூகத்தில் எழுத்தாளர்களில் கம்யூட்டர் அறிவு பொருந்திய ஒரு எழுத்தாளர் என்றால் ரொம்ப குறுகிய நபர்களில் இவர் ஒருத்தர்த்தான்
அவரது சடின்ஸ் பிக்சன் நாவல்களை நீங்கள் செருப்பால அடிக்கும் முன்பு படியுங்கள் .உங்களுக்கு ஒரு எழுத்தாளர் பற்றிய புரிதலின் மேல் எங்களுக்கு கண்டிப்பா சந்தேகம் வரும்.

//இந்த கதை எழுதிய காலம் சுமார் 20,25 ஆண்டுகளுக்கு முன்பு. ஆக, அவரின் சொந்த மன ஆழத்தில் உள்ள வக்கிரம் அவரின் எழுத்திலும் வெளிப்படுகிறது//
இந்த இடத்தில்தான் மகா எரிச்சல் வருகிறது ராமகிருஸ்ணர் விவேகானந்தர் படம் மாட்டிய மனிதர் இப்படி பேசமாட்டார் எனும் ஏற்கனவெ இருக்கும் உங்கள் பிம்பம் உடைந்து விட்டது அது உடைய சுஜாதா காரணமாகிட்டார் சரியா அதுக்கு சுஜாதாவை நோவானேன்.

Anonymous said...

'மங்களா என்னடா..இங்க ஒரு பங்களாவே வந்துக்கிட்டிருக்கு..அய்யய்யோ..பங்களா போர்ட்டிக்கோவாலேயே இந்த இடி இடிச்சுருச்சே' என்று விவேக் வாயில் திணிக்கப்பட்ட வசனத்துக்காகவே சுஜாதாவை பிஞ்ச செருப்பால அடிக்கலாம்..

காரணம் கேட்ட பூச்சாண்டியே...
சுஜாதா ஓ ஹென்றியிடம் இருந்து சுட்ட கதைகளுக்கு அவனை எதனால் அடிக்கலாம்?

பார்ப்பனர் சங்க மாநாட்டில் வீர உரை ஆற்றிவிட்டு கறுப்புத்தமிழச்சிகளை இழிவுபடுத்தியதற்கு எதனால் அவனை சாத்தலாம்?

சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் என்பதனை தமிழில் மொழிபெயர்ப்பதால் யாருக்கும் பயன்படப்போவதில்லை என்று வடிவுக்கரசி வாயில் வசனத்தைத் திணித்த அந்த பன்னாடையை எதனால் சாத்தலாம்?

புறநானூற்றுக்கு எளிய உரை எழுதுகிறேன் என்று அபத்தக்களஞ்சியம் ஒன்றைத் தந்து தன் முட்டாள்தனத்தை உயிர்மை பதிப்பகம் மூலம் ஊருக்கு பறைசாற்றிய ரங்கராஜனை என்ன செய்யலாம்? (ஆதாரம்:-முனைவர் தொ.பரமசிவம் எழுதிய விமர்சனக்கட்டுரை..காலச்சுவடு)

பூச்சாண்டிப் புடுங்கிகளிடம் கேட்க இன்னும் பல கேள்விகள் உள்ளன.. தொடரும்..

புல்டோசர்

Anonymous said...

செருப்படி தொடர்கிறது...

ஏதோ விஜயகாந்தும், அர்ஜூனும் மட்டும்தான் தங்கள் படங்களில் பயங்கரச்செயல் புரியும் மனிதர்களாக முஸ்லீம்களைக் காட்டுவதாகப் பலரும் நம்புகின்றனர். இந்தப் பன்னாடைகளுக்கெல்லாம் முன்னோடிப்பன்னாடை யாரு? நம்ம சுஜாதாதான். 1986இலேயே..இந்திய அரசின் ஏவுகணையை ஒரு முசுலீம் நாட்டுக்கு (சலாமியா) தீவிரவாதிகள் கடத்திப்போவர்.. அத்திட்டத்தை விக்ரம் எனும் இந்து முறியடித்து வருவார். சலாமிய நாட்டின் முசுலிமின் மனைவி விக்ரமிடம் சோரம் போவார்..என்று எவ்வளவு தூரம் முசுலீம்களை இழிவுபடுத்தமுடியுமோ அவ்வளவு தூரம் விக்ரமில் செய்து தீர்த்த ரங்கராஜனை எந்த செருப்பால் அடிப்பது?

ரோஜா என்றொரு இந்திய ஆக்கிரமிப்புப்படையின் காஷ்மீர் பிரச்சாரப் படத்திற்கு வஜனம் எழுதிக்கொடுத்த சுஜாதா, ஊர் ஊராய் சென்று எலக்கியம் பேசும்போது 'ரோஜா பாத்தீங்களா! எப்பிடி இருக்கு?ன்னு' கேட்டுவிட்டு மறக்காமல் ஒரு சம்பவத்தை விலாவரியாக எடுத்துச் சொல்லி தன் பங்குக்கு முசுலீம் எதிர்ப்புணர்வை எலக்கியவியாதிகளிடம் பரப்பினார். அச்சம்பவம்: "திருச்சியில் திரையரங்குகளில் அரவிந்தசாமி தீவிரவாதிகளிடம் அடிவாங்கும்போது முசுலீம் ரசிகர்கள் 'இன்னும் நல்லா குத்துடா' என்றார்கள்' " எனும் ஆக்கப்பூர்வமான இலக்கிய செய்தியை ஊரெங்கும் பரப்பினார். திருநெல்வேலி ஆர்யாஸ் ஓட்டலில் கூட 1992இல் இதனை சொல்லி இருக்கிறார்.. இந்த கொள்ளிமுடிவானை எதை வைத்து சாத்தலாம்?

கற்றதும்,விற்றதும் தொடரில் 'சிறீரங்கம் கோவில் ஒழுகுகளிலும் தேரிழுக்க வரும்ம் கோவிந்தர்களின் நாட்டுப்புறப்பாடலிலும் தேடினால் முசுலீம் மன்னர் படையெடுப்பின்போது 13000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட சேதி கிடைக்கக்கூடும்' என்று வலிந்து செய்தி எழுதினார் சுஜாதா. இதனை மறுத்து ஆ.சிவசுப்பிரமணியனில் இருந்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் வரை அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தியும் உள்ளனர். சும்மா கிடக்கிற ஊரிலே மதக்கலவரம் உண்டுபண்ண எழுதிவைக்கும் இந்தக் கொலை கொள்ளி மனிதனை எந்தச் செருப்பால் அடித்து நொறுக்கலாம்?

இன்னும் பல ஆதாரங்களுடன் தொடர இருக்கும்...

புல்டோசர்

Anonymous said...

செருப்படி தொடர்கிறது...

ஏதோ விஜயகாந்தும், அர்ஜூனும் மட்டும்தான் தங்கள் படங்களில் பயங்கரச்செயல் புரியும் மனிதர்களாக முஸ்லீம்களைக் காட்டுவதாகப் பலரும் நம்புகின்றனர். இந்தப் பன்னாடைகளுக்கெல்லாம் முன்னோடிப்பன்னாடை யாரு? நம்ம சுஜாதாதான். 1986இலேயே..இந்திய அரசின் ஏவுகணையை ஒரு முசுலீம் நாட்டுக்கு (சலாமியா) தீவிரவாதிகள் கடத்திப்போவர்.. அத்திட்டத்தை விக்ரம் எனும் இந்து முறியடித்து வருவார். சலாமிய நாட்டின் முசுலிமின் மனைவி விக்ரமிடம் சோரம் போவார்..என்று எவ்வளவு தூரம் முசுலீம்களை இழிவுபடுத்தமுடியுமோ அவ்வளவு தூரம் விக்ரமில் செய்து தீர்த்த ரங்கராஜனை எந்த செருப்பால் அடிப்பது?

ரோஜா என்றொரு இந்திய ஆக்கிரமிப்புப்படையின் காஷ்மீர் பிரச்சாரப் படத்திற்கு வஜனம் எழுதிக்கொடுத்த சுஜாதா, ஊர் ஊராய் சென்று எலக்கியம் பேசும்போது 'ரோஜா பாத்தீங்களா! எப்பிடி இருக்கு?ன்னு' கேட்டுவிட்டு மறக்காமல் ஒரு சம்பவத்தை விலாவரியாக எடுத்துச் சொல்லி தன் பங்குக்கு முசுலீம் எதிர்ப்புணர்வை எலக்கியவியாதிகளிடம் பரப்பினார். அச்சம்பவம்: "திருச்சியில் திரையரங்குகளில் அரவிந்தசாமி தீவிரவாதிகளிடம் அடிவாங்கும்போது முசுலீம் ரசிகர்கள் 'இன்னும் நல்லா குத்துடா' என்றார்கள்' " எனும் ஆக்கப்பூர்வமான இலக்கிய செய்தியை ஊரெங்கும் பரப்பினார். திருநெல்வேலி ஆர்யாஸ் ஓட்டலில் கூட 1992இல் இதனை சொல்லி இருக்கிறார்.. இந்த கொள்ளிமுடிவானை எதை வைத்து சாத்தலாம்?

கற்றதும்,விற்றதும் தொடரில் 'சிறீரங்கம் கோவில் ஒழுகுகளிலும் தேரிழுக்க வரும்ம் கோவிந்தர்களின் நாட்டுப்புறப்பாடலிலும் தேடினால் முசுலீம் மன்னர் படையெடுப்பின்போது 13000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட சேதி கிடைக்கக்கூடும்' என்று வலிந்து செய்தி எழுதினார் சுஜாதா. இதனை மறுத்து ஆ.சிவசுப்பிரமணியனில் இருந்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் வரை அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தியும் உள்ளனர். சும்மா கிடக்கிற ஊரிலே மதக்கலவரம் உண்டுபண்ண எழுதிவைக்கும் இந்தக் கொலை கொள்ளி மனிதனை எந்தச் செருப்பால் அடித்து நொறுக்கலாம்?

இன்னும் பல ஆதாரங்களுடன் தொடர இருக்கும்...

புல்டோசர்

Anonymous said...

சுஜாதாவை செருப்பாலும் விளக்குமாத்தாலும் அடிக்கத் தகுந்த காரணங்களைத் தந்தமைக்கு தோழர் பாமரனுக்கு நன்றி:

பாமரனின் 'பாய்ஸ்' விமர்சனத்தில் இருந்து:---

மொதல் சீன்லயே ஒருத்தன் ஜிப்பக் கழுட்டீட்டு வர்றான்…

சரி ஏதோ ஜிப்பு வைக்கத்தான் காசில்லாத வறுமையோன்னு
படத்தப் பார்த்தா… எதுக்கால வர்ற பொண்ணுகிட்ட
நீ பாக்கறதுக்குத்தான் கழுட்டீட்டு வர்றேங்கறான்.

“அடி செருப்பால…”ன்னு பக்கத்துல இருந்து சத்தம் கேக்கற நேரமாப் பார்த்து…
வசனம் சுஜாதா…ன்னு தெரைல போடறான்.

ச்சேச்சே… நம்மாளு நல்லவரு…
அவர இந்தாளுதான் கெடுத்திருப்பாருன்னு நெனச்சுக்கிட்டே
படத்தப் பாக்க ஆரம்பிச்சா… கிறுகிறுன்னுவருது.

இன்னொருத்தன் வர்றான்
தொடைக்கு நடுவுல கைய வைக்கிறான்…
“என்ன அரிக்குதா..?”ங்குது ஒரு மாதர் குல மணிவிளக்கு.

எவனோ ஒருத்தன் ஒருத்தியக் கூட்டீட்டு சாப்படப் போறான்…
“சாப்புட்ட காசுக்கு அளவா கைய மட்டும் புடிச்சுக்கோ…
தொடையெல்லாம் டூமச்சூ…”ங்கிறா
.........
செருப்படிகளைத் தொடரக் காத்திருக்கும்

புல்டோசர்.

TBCD said...

/*pamaran said...
அன்புள்ள நண்பரே,
இந்தியில் ஒளிபரப்பாகும் அத் தொடர்கள் குறித்த தகவல்களை கொஞ்சம் அனுப்பி வையுங்களேன். அது பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்,
பாமரன் */

நான் இதன் பொருட்டு நான் அவைகளை பார்ப்பதை நிறத்தி விட்டேன்... ஆனால், நீங்கள் கேட்பதால் அது பற்றி தகவல் சேகரிக்க போகின்றேன்.. என்ன இங்கு...ஒரே ஒரு சானல் தான் வருகிறது.. ஆனால் அதிலும் காமெடி என்று தமிழ்ர்களை கிண்டல் செய்து கொன்டு தான் இருப்பார்கள்...

Anonymous said...

சுஜாதாவின் தரம் இதில் புரியும்..
இவர் எப்படி அடுத்தவர்களின் உழைப்பை தன்னது என்று கூசாமல் பொய் சொல்கிறான் என்று...
இது நடந்து 2003ல்..


//
I have been out of touch with tamil linux activities for a while due to work
pressure. This mail made me go through all past messages in this topic.

Lack of respect for others' work is a bane in our community. All my respect for
Sujatha is under question now. I was slightly pained when he ridiculed in one of
his talks/articles about "volunteers translating in weekends instead of
shopping". Well, I agree that sustaining the translation work as volunteers is
pretty difficult. But, I don't understand how this Marathon thing is better. I
can imagine only sujatha lovers signing up for such events and translating Linux
into "Sujatha" tamil.

I am not discouraging the effort of the 'zha' Project to get something solid out
to Tamils. But, It wouldn't take much time for them to list the names of Venkat,
Vasee, Dinesh and other pioneers in their website which is definitely going to
be popularised by Sujatha's articles. I know these people may not be dying for
publicity but hey, they're definitely worth mentioning compared to the Marathon
contributors.

My 2 cents,
Ramani

V Venkataramanan wrote:
Hello all,

After a long wait and a series of persuasive emails through TamilPC
project, his personal contacts and finally directly to him, I received
the following one line curt reply to my long email seeking to clarify
the miscommunication. With his abundant access to the popular media, it
is very simple and easy for him to have just made one statement,
acknowledging the valuable contributions of volunteers in various Tamil
Linux, Open Source, Free Software projects. His brushing aside the
whole community is really very disappointing. My image about him is
crumbling.

I now get a feeling that this, after all, is not miscommunication, but a
willing abuse of his powers in his media for self promotion. So, we are
left with no choice but to call the bluff.

I hate to do this, but we are now left with no choice. I am now
preparing an essay to be forwarded to popular tamil media. As is always
our practice, I will send the beta version of my essay to some pioneers
here to get the feedback before we release to the public.

I have decided not to publicize my original letter to him, as people may
read it wrong and use it for a personal attack on him/his project. Our
aim, after all, is to motivate people in the real ideals that we believe
is good for our society.

anpudan
venkat
----

your long letter has been abswered see the FAQ
Sujatha
----- Original Message -----
From: V. Venkataramanan
To : Sujatha
Sent: Friday, December 12, 2003 7:23 AM
Subject: Tamil PC Project



> Dear Mr. Sujatha,
>
> A few days back, I tried sending this letter to you through Tamil PC
> group email. I was informed by Mr. Shashidhar that indeed was forwarded
> to your attention. As I still do not get either a direct response or in
> any popular media, I am apprehensive of it having reached you. There was
> also another mail from Mr. Muguntharaj (Tamil Mozilla and Open Office
> Team Leader), similar to my questions and I feel your direct response
> may help in avoiding miscommuniation. Today, one of my friends gave me
> these email addresses as your current. So, I am forwarding my old mail.
>
> I am looking forward to your response,
>
> Warm regards,
> venkat

குருத்து said...

கம்யூனிச பூச்சாண்டி சொல்வதில் ஒரு விசயத்தில் உடன்படுகிறேன். ஒன்றிரண்டு, விசயங்களைச் சுட்டி காட்டி, செருப்பால் அடிக்கக் கூப்பிடுவதில் எனக்கும் உடன்பாடில்லை தான்.

சுஜாதாவை அம்பலப்படுத்த இன்னும் இதைவிட் மோச்மாக அம்பலப்படுத்த நூற்றுக்கணக்கான விசயங்கள் இருக்கின்றன.

அதையெல்லாம், கொஞ்சம் சிரமமேற்கொண்டு தெரியப்படுத்தினால், க.பூ.யே செருப்பை விட இன்னும் மோசமாய் எடுத்து, அவரே அடிக்க கிள்மபிவிடுவார்.

புத்தகப் பிரியன் said...

//"சுஜாதாவிற்கு செருப்படி போதுமா?"

மாத்தி வாசி...//

அருமையான பதிவு

வாழ்த்துக்கள்
புத்தகப்பிரியன்

Anonymous said...

சுஜாதாவும் தமிழ் லினக்ஸ்-

http://domesticatedonion.net/tamil/?p=148

Anonymous said...

என்னங்க ஆளையே காணோம்? சமூகம் கெட்டு கிடக்கு!

நீங்க ஒண்ணுமே எழுதாம இருந்தா எப்படி?