Tuesday, 17 July 2007

ராமசாமியும், அவன் பொண்டாட்டியும், கந்தசாமியும்...

ஒரு குட்டி கதை சொல்லட்டா?

நம்ம ராமசாமி பொண்டாட்டிய புதுசா வேஷம் கட்டிக்கினு வந்த கந்தசாமி வூட்டுக்குள்ளாற பூந்து தூக்கினு பூட்டானாம்.. ராமசாமி ரிடர்ன் வந்து விஷயத்தை கண்டுக்கினு படா டென்ஷன் ஆகிக்கினானாம்..அப்பால கந்தசாமியோட பேக்கிரவுண்டு இன்னா, ஏதுன்னு விசாரிக்கசொல்லோ மெய்யாலுமே மெர்சலாகி போச்சு தாம் ராமசாமிக்கு.. சரி இன்னா பண்றதுன்னு வூட்டாண்ட இருந்த ஆளுங்கள எல்லாம் வலிச்சுகினு போனாலும் பத்தாதுன்னு நெனைச்சுகினு போற வழியில நம்ம வீராசாமியயும் அவம் ஆளுங்களயும் கூட்டம் சேர்த்துகினு கிளம்புனானாம். அப்படியே கெளம்பி போயி கந்தசாமியோட பேட்டைக்குள்ளாறயே ஜபர்தஸ்தா பூந்து சும்மா அடி பின்னி எடுத்துப்புட்டு, வீராசமிய வுட்டு பேட்டையில அல்லாத்தயும் கொளுத்தி போட்டுட்டு அவம்பொண்டாட்டிய மட்டும் வூட்டுக்கு இட்டாந்தானாம்.. அதுக்கு பொறவுதான் ஒரு டவுட்டானானாம்.. இன்னாடாது.. நம்ம பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த பொறவு அவ போக்கே செரியில்லயே..இத்தினி நா கந்தசாமி வூட்டுல இருக்கசொல்லோ எதுவும் மேட்டர், கீட்டர் ஆயிடுச்சான்னு..அத கேட்ட ராமசாமி பொண்டாட்டிக்கு மெய்யாலுமே மனசுக்கு கஸ்டமா பூடுச்சாம். இன்னாடாது நமக்கு கட்டுனவனும் சரியில்ல, இவனுக்கு தூக்கிட்டு போனவனே தேவலாம்போலன்னு சொல்லிகினு தாம் மேலயே நெருப்ப பத்த வச்சுகினாளாம். அவ்ளோதான்! கத முடிஞ்சு போச்சு...

இன்னாம்மே முயிக்கிறே..
இந்த கத உனுக்கு தெரியாதா..? இன்னாமே சொல்ற?
இத தானம்மே ஆயிரம், ரெண்டாயிரம் வருசமா நம்ம நாட்டுல சொல்லிகினுகீராங்க..
பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த ராமசாமியத்தான் அங்கங்க செல வச்சு கும்பிட்டுகினுகீறாங்களாமே..
இந்த கத தாம்மே நம்ம நாட்டுக்கே பேர் பெத்த ஏதோ "ராமாயணம்"னுவாங்களாமே?
----------------------------------------------------------
உங்கள் புரிதலுக்காக இங்குள்ள சென்னைத்தமிழ் வார்த்தைகள்..

வூடு - வீடு
பூந்து - புகுந்து
பேக்கிரவுண்டு - பின்னணி
மெர்சல் - பயம்
வலிச்சுகினு - சேர்த்துக் கொண்டு
பேட்டை - இடம்
ஜபர்தஸ்தாக - தைரியமாக, வலுக்கட்டாயமாக
டவுட்டு - சந்தேகம்
செல - சிலை
-----------------------------------------------------------
-படைப்புக்கு மூலக் கருத்து பேரா. பெரியார்தாசன் சொற்பொழிவில் இருந்து உருவானது..
பேரா.பெரியார்தாசனுடைய முழு சொற்பொழிவையும் கேட்க கீழே சொடுக்கவும்..



இது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தஞ்சை தமிழ் மக்கள் இசை விழாவில் (பிப். 2003)பேசியது..

3 comments:

Anonymous said...

ஏற்கனவே பெரியார் தாசனின் பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவு ஒன்றில் கேட்டவைதான் இது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். 'காஞ்சி பிலிம்ஸ்' ( http://kanchifilms.blogspot.com/ )எனும் வலைப்பூவில் இந்த ஒலிப்பேழைக்கான இணைப்பு இருக்கிறது. நீங்களாகவே அந்த இனைப்பை உங்கள் தளத்தில் சேர்த்துவிட்டால் நன்றாக இருக்குமென தாழ்மையுடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி பால்வெளி.

பால்வெளி said...

பின்னூட்டமிட்டமைக்கு நன்றி...

இக்கதைக்கான தூண்டுதல் பெரியார் தாசன் சொற்பொழிவு என நான் பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த மொழியில் கேட்ட பின்பு தான் ராமன் என்றொரு கட்டமைப்பை இதை விட எளிமையாக உடைக்க முடியாது என உணர்ந்தேன். அதை அறியாதவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதே என் நோக்கம். ஒலிப் பேழையை இணைக்க தகவல் தந்தமைக்கு நன்றி மாசிலா..

Anonymous said...

I found few slips in ur 'Ramasamy' story which is said to reflect ‘Ramayana’. It looks like u've added few masalas to it, which i've not heard of in any ramayana books.
Masala 1:
//அத கேட்ட ராமசாமி பொண்டாட்டிக்கு மெய்யாலுமே மனசுக்கு கஸ்டமா பூடுச்சாம். இன்னாடாது நமக்கு கட்டுனவனும் சரியில்ல, இவனுக்கு தூக்கிட்டு போனவனே தேவலாம்போலன்னு சொல்லிகினு தாம் மேலயே நெருப்ப பத்த வச்சுகினாளாம். //
Seetha is one of the chaste & modest women, who compared Ravana to a blade of grass. Seetha didn't show any change in her character or chastity after coming to Rama from Lanka. So, Seetha never thought that Ravana is much better than Rama.

Masala 2:
//அதுக்கு பொறவுதான் ஒரு டவுட்டானானாம்.. இன்னாடாது.. நம்ம பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த பொறவு அவ போக்கே செரியில்லயே..இத்தினி நா கந்தசாமி வூட்டுல இருக்கசொல்லோ எதுவும் மேட்டர், கீட்டர் ஆயிடுச்சான்னு.. //
Rama didn't suspect seetha. Being a king, he wanted to prove Seetha's modesty and put an end to the gossips. Moreover, he knows for sure that seetha is pure and fire can never touch her.

Makkalai nal vazhi padutha uruvaakapatta kadhaigalai, Poigal kalanda unmaigal koori thiripadaal thani manidha ozhukamum, samudhayathin ozhukamum seekulaikka padugiradhu!!